அடுத்தாண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படாது! தமிழக அரசு

Wait 5 sec.

விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒருநாள் அவகாசம் வழங்கி தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியையொட்டி, நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஹரிஹரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க இயலாது என்று தெரிவித்திருந்தது. அடுத்தாண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்கப்படமாட்டாது என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.இதையடுத்து, அடுத்தாண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில், சிலைகள் கரைக்கப்படமாட்டாது என்றும், இதுசம்பந்தமாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள், விதிகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மேலும் ஒருநாள் அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய நடுவர், விநாயகர் சிலைகள் கரைப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்து மூன்றாண்டுகள் கடந்து விட்டன, கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி முடிந்தபிறகு, நடப்பாண்டு சிலைகளைக் கரைப்பதற்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என கேள்வி எழுப்பினர். பின்னர், அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் வழங்கி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளார்.Vinayagar idols will not be immersed at Neelankarai and Pattinapakkam from next year: TN govtஅடக்கி வாசிங்க! திமுகவின் தயவால்தான் காங்., விசிக, முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது! அன்புமணி