ஆந்திர மாநில முன்னாள் துணை முதல்வர் காளி கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் என்னும் அல்லா நானி மாரடைப்பு காரணமாக இன்று (செப். 15) காலமானார். அவருக்கு வயது 57.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வீட்டில் வசித்துவந்த நிலையில், இன்று மாரடைபு காரணமாக அல்லா நானி உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், 2004 மற்றும் 2009 ஆண்டு தேர்தலில் ஏலூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். எனினும் இதில் தோல்வி அடைந்தார். மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற இவர், 2022 வரை முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்தார். இதுமட்டுமின்றி சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்! ராகுல் காந்தி கண்டனம்!Former Andhra Pradesh Deputy Chief Minister Kali Krishna Srinivas