மீண்டும் நாடகம்! பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை வாங்க மறுத்த இந்திய அணியை விமர்சித்த காங்கிரஸ்!

Wait 5 sec.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்த இந்திய கிரிக்கெட் அணியை காங்கிரஸ் நிர்வாகி உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.மகளிருக்கான 10-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது.இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோசின் நக்வியின் கையால் வெற்றிக் கோப்பையைப் பெற இந்திய மகளிா் அணி மறுத்துவிட்டது.இதனை விமர்சித்து காங்கிரஸ் நிர்வாகி உதித் ராஜ் பேசியிருப்பதாவது:“மீண்டும் மோசமான, செயற்கையான நாடகம் நடந்துள்ளது. பாகிஸ்தான் அணியினர் ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்து, இங்கே தங்கி விளையாடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது கையிலிருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள மறுப்பது என்பது வெறும் நாடகமே தவிர வேறில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்திய ஆடவா் அணி ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் ஆனபோதும், இதேபோல் மோசின் நக்வி கையால் கோப்பை பெற மறுத்தது நினைவுகூரத்தக்கது.இதனிடையே, தில்லியில் நேற்றிரவு நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, தேசிய கீதத்துக்கு முன்னதாக, முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டதற்கும் உதித் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.“வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதில் என்ன பலன் இருக்கிறது? இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறதா? இந்திய அணியினர் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்பதுதான் விஷயம். அவர்களின் வெற்றிக்காக வாழ்த்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.Drama again! Congress criticizes the Indian team for refusing to accept the trophy from a Pakistani minister!பாகிஸ்தான் அமைச்சர் நக்வி கையில் ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!