தவெக கட்சி கொடி வண்ணத்தில் புதிய பேருந்துகள்!

Wait 5 sec.

சேலத்தில் தவெக கட்சி கொடி வண்ணத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்துகள், பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.தவெக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி, சேலம் மாவட்டத்தில் 30 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்துப் பணிமனையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் அனைத்தும், தவெக கட்சி கொடியான மஞ்சள் சிகப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு, ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப திட்டங்களின் பெயர், பேருந்து வண்ணங்கள் மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது.இந்த நிலையில், புதிய பேருந்துகளுக்கு தவெக கட்சியின் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.New buses procured in the colours of the TVK party flag are ready for service in Salem.மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்