ரூ. 50 கோடியை நெருங்கும் மண்டாடி!

Wait 5 sec.

நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரியின் மண்டாடி மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படங்கள் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், சர்தார் - 2 கலவையான விமர்சனங்களையும் மண்டாடி நல்ல விமர்சனங்களையும் பெற்றன. இதனால், மண்டாடி திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரித்தது.மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சேர்த்து மண்டாடி திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 4.70 கோடியையும் சர்தார் - 2 ரூ. 4.50 கோடியையும் வசூலித்துள்ளதாகக் கூறப்பட்டது.இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் இதுவரை ரூ. 50 கோடி வசூலை நெருக்கியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரி நடித்த திரைப்படங்களிலேயே இப்படம் அதிகமான வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் சவாலானது: கருணாஸ்Information regarding the box office collection of the movie Mandaadi, starring actor Soori, has been released.