நத்தம் அருகே வைக்கோல் லாரியில் தார்ப்பாய் அகற்றியபோது மின்சாரம் பாய்ந்ததில் 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள மார்க்கம்பட்டி எல்லைப்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (23). லாரி ஓட்டுநரான இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஈச்சர் லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு எல்லைப்பட்டிக்கு வந்தார்.லாரியில் இருந்து வைக்கோலை கீழே இறக்குவதற்காக தார்ப்பாயை அகற்ற முயன்றபோது, அது சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தார்ப்பாயை எடுப்பதற்காக எல்லைப்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பெரியகருப்பன் லாரியின் மேல் ஏறியுள்ளார்.அப்போது, லாரியின் அருகே சென்ற மின்சாரக் கம்பி அறுந்து சிறுவன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் பெரியகருப்பன், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அறுந்து விழுந்த மின் வயரால் வைக்கோல் லாரியும் தீப்பற்றியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாணார்பட்டி போலீஸார், சிறுவனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Boy electrocuted to death while removing tarpaulin from hay truck near Nathamவாழப்பாடியில் திடீர் தீ விபத்து: 2 குடிசைகள் எரிந்து சாம்பல்!