மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.மதுராந்தகம் (தனி) தொகுதியில் கணிதா சம்பத்தும் தாராபுரம் (தனி) தொகுதியில் பானுமதியும் அதிமுக வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.இந்த நிலையில், இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில், கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, துணைப் பொதுச் செயலர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை, கட்சி தேர்தல் குழு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.ஆனால், முன்னாள் அமைச்சர்களும் மூத்த உறுப்பினர்களுமான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரின் பெயர்கள் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.சமீபகாலமாக கட்சித் தலைமையின் மீது எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். முன்னாள் நிர்வாகிகளான சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.By-election! S.P. Velumani and C.V. Shanmugam are not on the AIADMK's list of star speakers!சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!