தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை டெங்கு காய்ச்சலால் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் பலியாகியுள்ளனர்.நேற்று (செப். 17) ஒரே நாளில் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில், 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் நேற்று 156 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதில், 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணியில் 25,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, காய்ச்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.Dengue fever cases in Tamil Nadu rise to 16,577! 244 people affected in a single day!சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!