இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ள நிலையில், ஆப்பிள் ஸ்டோர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் விற்பனை இந்தியாவில் வெள்ளிக்கிழமை (செப். 18) காலை 8 மணிக்குத் தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ஆப்பிள் 18 சீரிஸை வாங்க, ஆப்பிள் போன் பிரியர்கள் காலை முதலே ஆப்பிள் ஸ்டோர்களில் குவியத்தொடங்கினர். தலைநகர் தில்லி, நொய்டா, மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள முக்கிய கடைகளில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் அலைமோதியது.#WATCH | Maharashtra: Apple begins the official sale of the iPhone 18 Pro and iPhone 18 Pro Max; a large number of people throng the company's store at Jio World Drive in Mumbai pic.twitter.com/PyFjeG24ag— ANI (@ANI) September 18, 2026ஐபோன் 18 ப்ரோவின் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் ஆரம்ப விலை ரூ. 1,64,900 ஆகவும், 512 ஜிபி மாடலின் விலை ரூ. 1,89,900 ஆகவும், 1 டிபி மாடலின் விலை ரூ. 2,39,900 ஆகவும் உள்ளது. டாப்-எண்ட் 2 டிபி வேரியன்ட்டின் விலை ரூ. 3,14,900.#WATCH | Mumbai: Massive crowds gather outside the Apple Store in Mumbai as eager customers queue up ahead of the official sales launch of the iPhone 18 Pro and iPhone 18 Pro Max in India. pic.twitter.com/vOGotGmyFE— ANI (@ANI) September 18, 2026இதற்கிடையில், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ. 1,79,900. இந்த இரண்டு மாடல்களும் பர்கண்டி ரெட், கிளேசியர், சில்வர் மற்றும் கருப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றன.ஐபோன் 18 ப்ரோ 6.3-அங்குல திரையையும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 6.9-அங்குல திரையையும் கொண்டுள்ளது. ஐபோன் 18 ப்ரோ ஒரே சார்ஜில் 24 மணிநேரம் வரையிலும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் சுமார் 30 மணிநேரம் வரையிலும் பேட்டரி தாங்கும் வசதியையும் கொண்டுள்ளது.The Apple iPhone 18 Pro and iPhone 18 Pro Max are officially on sale in India today, with eager buyers turning up in large numbers outside major Apple outlets across the country.