சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,160 உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து வருகிறது.சென்னையில் தங்கம் விலை, கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 360 -ம், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 680 -ம் குறைந்தது. புதன்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்த நிலையில் வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்தது.இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் நிலவரம்இன்று (செப். 18, வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ. 145 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,155-க்கும் சவரனுக்கு ரூ. 1,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 113,240-க்கும் விற்பனையாகிறது.இன்றைய வெள்ளி நிலவரம்வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 255 -க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Today Gold and silver price in Chennai, Tamilnadu