ஓடிடியில் வெளியானது மொத ராத்திரி!

Wait 5 sec.

நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் வெளியான மொத ராத்திரி திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் ’மொத ராத்திரி’.புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.நடிகர்கள் சேத்தன், பகவதி பெருமாள், ஷெல்லி, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “மொத ராத்திரி” படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள இப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (செப். 18) வெளியாகியுள்ளது.'Modha Rathiri' has been released on OTT!இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (செப். 18 - 24)