டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்கள்..! முதல் வீரராக உலக சாதனை படைத்த ஜாஸ் பட்லர்!

Wait 5 sec.

டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் ஜாஸ் பட்லர் (36 வயது) உலக சாதனை படைத்துள்ளார். முதல் வீரராக 15,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை வென்றுள்ளது. கடைசி டி20 நாளை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் ஜாஸ் பட்லர் முதல் போட்டியில் பட்லர் 44 பந்துகளில் 80 ரன்களும் இரண்டாவது போட்டியில் 16 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து அசத்தினார்.இந்த சிறப்பான பேட்டிங் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஜாஸ் பட்லர் 15,000 ரன்களைக் கடந்துள்ளார். இரண்டாவது இடத்தில் கைரன் பொல்லார்டு 14,999 ரன்களுடன் இருக்கிறார். இந்தப் பட்டியலில் டாப் 5 இடத்தில் எந்த ஒரு இந்தியர்களும் இடம்பெறவில்லை. விராட் கோலி மட்டுமே 6ஆவது இடத்தில் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் 1. ஜாஸ் பட்லர் - 15,000 ரன்கள் (528 போட்டிகள்) 2. கைரன் பொல்லார்ட் - 14, 999 ரன்கள் (754 போட்டிகள்)3. அலெக்ஸ் ஹேல்ஸ் - 14, 581 ரன்கள் ( 537 போட்டிகள்)4. கிறிஸ் கெயில் - 14, 562 ரன்கள் (463 போட்டிகள்)5. டேவிட் வார்னர் - 14, 284 ரன்கள் (439 போட்டிகள்)6. விராட் கோலி - 14, 218 ரன்கள் (430 போட்டிகள்)7. ஜேம்ஸ் வின்ஸ் - 14, 081 ரன்கள் (501 போட்டிகள்) Jos Buttler becomes the first player to reach 15,000 T20 runs An incredible achievement for England’s greatest ever white-ball player pic.twitter.com/f3baodGi7M— England's Barmy Army (@TheBarmyArmy) September 17, 2026ரோஹித் சாதனையை முறியடித்த அபிஷேக்15,000 runs in T20 cricket..! Jos Buttler sets the record as the first player to achieve this feat!