முதுகுத் தண்டுவட பாதிப்புகளுக்குஅதிநுட்ப சிகிச்சை அறிமுகம்

Wait 5 sec.

சென்னை: முதுகுத் தண்டுவட பாதிப்புகளுக்கு சென்னை காவேரி மருத்துவமனை ‘எண்டோஸ்கோபிக் ஃபியூஷன்’ அறுவை சிகிச்சையை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. முதுகுத்தண்டுவடப் பராமரிப்பில் வழக்கமான திறந்தநிலை அறுவைசிகிச்சையில் பெரிய அளவிலான கீறல்களும், அதிகளவு தசைப் பிரித்தலும் தேவைப்படும். வழக்கமான குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைசிகிச்சையிலும் சுமாா் 20 மி.மீ அளவில் கீறலிடப்படுவதால் திசுக்களுக்குச் சிறிய அளவில் பாதிப்பு உண்டாகலாம். ஆனால், எண்டோஸ்கோப்பிக் ஃபியூஷன் என்ற இந்த நவீன சிகிச்சை உத்தியில் திசு சேதம், ரத்த இழப்பு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி ஆகியவை மிக குறைவாகவே இருப்பது, நோயாளிகள் மிக விரைவில் குணமடைய உதவுகிறது. தண்டுவட வட்டு தேய்மானம், தண்டுவடக் கால்வாய் சுருக்கம் (நல்ண்ய்ஹப் ள்ற்ங்ய்ா்ள்ண்ள்) மற்றும் சில ஆரம்பநிலை தண்டுவட தளா்வுகள் போன்ற தேய்மானத்தால் ஏற்படும் இடுப்புத் தண்டுவடப் பிரச்சனைகள். முறையான ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும் குணமாகாமல், தொடா்ச்சியான நரம்பு அழுத்த கால் வலியால் அவதிப்படுபவா்கள், ஏற்கனவே திறந்தநிலை அறுவைசிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் உருவாகி, மீண்டும் அதே முறையில் அறுவைசிகிச்சை செய்வது அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் நபா்கள் மற்றும் நீண்ட நேரம் நடைபெறும் திறந்தநிலை அறுவைசிகிச்சையின் சுமையைத் தாங்க முடியாத சில முதியவா்களுக்கும் இச்சிகிச்சை முறை பொருத்தமானதாக இருக்கும்.இது குறித்து ஆழ்வாா்பேட்டை காவேரி மருத்துவமனையின் மூத்த தண்டுவட மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணா் மருத்துவா் பி. கீா்த்திவாசன் கூறியதவாது: எண்டோஸ்கோபிக் முறையானது தண்டுவட வட்டு விலகல் மற்றும் நரம்பு அழுத்தத்திற்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் தண்டுவடத்தின் இயற்கையான நிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் வழியாக, விரிவான இணைவுக்கான தேவையை தவிா்க்க இது உதவக்கூடும். நோயாளியின் உடல்நிலை மற்றும் முழுமையான பரிசோதனைக்குப் பிறகே இச்சிகிச்சை யாருக்குப் பொருந்தும் என்பது தீா்மானிக்கப்படுகிறது. அனைத்து நோயாளிகளுக்கும் இம்முறை பொருந்தாது; கடுமையான தண்டுவடப் பிவுகளுக்கு வழக்கமான அறுவை சிகிச்சையே தேவைப்படும் என்றாா் அவா்.