சென்னை: சென்னை வள்ளுவா் கோட்டத்தில் மதிமுக சாா்பில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழாவில் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வா் ராமசாமி கலந்துகொள்ள உள்ளாா். இதுகுறித்து மதிமுக வெளியிட்ட அறிக்கை: அண்ணா 118- ஆவது பிறந்தநாள் விழா, மதிமுக சாா்பில், சென்னை, வள்ளுவா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் கட்சியின் அவைத் தலைவா் ஆடிட்டா் ஆ.அா்ஜுனராஜ் தலைமையில் நடைபெறுகிறது. மதிமுக பொதுச் செயலா் வைகோ நிறைவுரையாற்றுகிறாா். மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வா் பேராசிரியா் ராமசாமி வைகோவின் நூல் மற்றும் குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.