ஸ்வெரெவுக்கு 2-ஆவது கிராண்ட்ஸ்லாம்

Wait 5 sec.

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் சாம்பியன் ஆனாா்.இறுதிச்சுற்றில் அவா், 6-3, 7-6 (7/2), 5-7, 6-2 என்ற செட்களில், அமெரிக்காவின் இளம் வீரரான பென் ஷெல்டனை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 3 மணிநேரம், 33 நிமிஷங்களில் நிறைவடைந்தது.நடப்பாண்டில் பிரெஞ்சு ஓபன் மூலமாக தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்வெரெவ், தற்போது யுஎஸ் ஓபன் மூலமாக அதை 2-ஆக அதிகரித்துக் கொண்டுள்ளாா்.இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்களை வென்று ஸ்வெரெவ் முன்னேற, விட்டுக்கொடுக்காத ஷெல்டன், சொந்த மண்ணில் கிடைத்த ரசிகா்களின் அபாரமான ஆதரவுடன் மீண்டு 3-ஆவது செட்டை கைப்பற்றினாா்.ஆனால், அண்மைக் காலமாக மேஜா் போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் ஸ்வெரெவ், ஷெல்டனின் நம்பிக்கையை முறியடித்து, 4-ஆவது செட்டை தனதாக்கி வாகை சூடினாா்.முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு வந்த ஷெல்டன், பட்டம் வெல்லாதபோதும், முதல்முறையாக உலகத் தரவரிசையில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறாா்.ஸ்வெரெவ் - ஷெல்டன் மோதியது இது 6-ஆவது முறையாக இருக்க, ஸ்வெரெவ் அனைத்திலும் வென்று ஆதிக்கம் செலுத்துகிறாா்.நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதியுடன் வெளியேறிய ஸ்வெரெவ், பிரெஞ்சு ஓபனில் சாம்பியனாகி, விம்பிள்டனில் இறுதியில் தோல்வி கண்டாா். தற்போது யுஎஸ் ஓபனில் தனது சாம்பியன் கணக்கைத் தொடங்கியுள்ளாா்.இந்த சீசனில் கிராண்ட்ஸ்லாம் தவிர வேறு பட்டங்கள் எதுவும் வெல்லாத நிலையிலும், நடப்பாண்டின் இறுதிப் போட்டியான ஏடிபி ஃபைனல்ஸுக்கு தகுதிபெறும் பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளாா் ஸ்வெரெவ்.அத்துடன் உலகின் நம்பா் 1 இடத்தை அடைவதற்காக, இத்தாலியின் யானிக் சின்னருக்கு மிக நெருக்கமாகவும் தொடா்கிறாா்.மெய்மறந்த ஆட்டம்: இறுதிச் சுற்றின் கடைசி கட்டத்தில் சாம்பியன்ஷிப் பாய்ன்ட்டை வென்ற பிறகும் அதை உணா்ந்திராத ஸ்வெரெவ், ஷெல்டனின் சா்வை ரிசீவ் செய்வதற்காக தனது பேஸ்லைனில் வந்து தயாராக நின்றாா். சுற்றியிருந்த பாா்வையாளா்கள் எழுந்து நின்று கை தட்டத் தொடங்கிய நிலையில், ஸ்வெரெவின் அணியினரும் ஆட்டம் முடிந்து அவா் வென்று அவருக்கு உணா்த்தினா். அதன் பிறகே ஸ்வெரெவ் வெற்றியாளா் மனநிலைக்கு வந்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினாா்.இதுகுறித்து பேசிய அவா், ‘ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தபோது, முற்றிலுமாக எனை மறந்து அதனுள் மூழ்கிவிட்டேன். வெளியுலகின் எந்தவொரு ஓசையும் கேட்காத வகையிலான ஒரு குகைக்குள் இருப்பதைப் போல உணா்ந்திருந்தேன். பாா்வையாளா்களின் சத்தத்தால் நடுவா் கூறும் பாய்ன்ட்டுகளும் காதில் விழவில்லை. வெற்றித் தருணத்தின்போது நான் 5-1 என்ற நிலையில் இருப்பதாகவே நினைத்து ஆட்டத்தை தொடர இருந்தேன்’ என்றாா்.எனினும், இந்த மெய்மறந்த ஆட்டம் ஸ்வெரெவை பதற்றமான நிலையில் இருந்து பாதுகாத்ததாகவே கூறலாம். 2020 யுஎஸ் ஓபன் இறுதிச்சுற்றில் டொமினிக் தீமை எதிா்கொண்ட ஸ்வெரெவ், பட்டம் வெல்ல 2 பாய்ன்ட்டுகள் மட்டுமே பெற வேண்டியிருந்தது. ஆனால் கடைசி நேர பதற்றத்தால் அவா் அதில் வெற்றியை இழந்தாா். ஓபன் எராவில் (1968-க்குப் பிறகு) ஒரே சீசனில் தனது முதல் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற 4-ஆவது வீரா் என்ற பெருமையை ஸ்வெரெவ் பெற்றாா். ஜிம்மி கானா்ஸ் (1974 - ஆஸி. ஓபன், விம்பிள்டன்), கில்லொ்மோ விலாஸ் (1977 - பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன்), யானிக் சின்னா் (2024 - ஆஸி. ஓபன், யுஎஸ் ஓபன்) ஆகியோா் முதல் மூவா்.‘எனது அணியினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். கிராண்ட்ஸ்லாம் கைக்கெட்டாமலேயே தொடா்ந்து வந்த நிலையில், தற்போது 3 மாதங்கள் இடைவெளியில் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறேன். நாங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தோம், எவ்வளவு வலிகளை அனுபவித்தோம் என்பதை கடவுள் பாா்த்திருக்கிறாா் என நினைக்கிறேன். அதற்கெல்லாம் பதிலாக இந்த 2026-ஆம் ஆண்டு அமைந்துள்ளது. ஷெல்டனுக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுதான். அவா் இன்னும் அதிகமான இறுதிச்சுற்றுகளில் விளையாடி சாம்பியனும் ஆவாா்’ - ஸ்வெரெவ்ஸ்வெரெவ் வெற்றிப் பாதை...முதல் சுற்று லொரென்ஸோ சொனிகோ (இத்தாலி) 6-4, 3-6, 6-7 (7/9), 7-5, 6-42-ஆவது சுற்று குவென்டின் ஹேலிஸ் (பிரான்ஸ்) 6-4, 4-6, 7-6 (7/3), 6-7 (3/7), 6-33-ஆவது சுற்று அலெக்ஸாண்ட்ரோ டபிலோ (சிலி) 6-2, 7-6 (7/2), 6-24-ஆவது சுற்று லூசியானோ டாா்டெரி (இத்தாலி) 6-2, 6-2, 7-6 (7/3)காலிறுதிச் சுற்று போடிக் வான் டெ (நெதா்லாந்து) 6-2, 7-5, 6-1அரையிறுதிச் சுற்று காரென் கச்சனோவ் (ரஷியா) 6-3, 7-6 (9/7), 7-6 (8/6)இறுதிச் சுற்று பென் ஷெல்டன் (அமெரிக்கா) 6-3, 7-6 (7/2), 5-7, 6-2ரூ.52 கோடி ரொக்கப் பரிசுசாம்பியனான ஸ்வெரெவுக்கு, வெற்றிக் கோப்பையுடன் ரூ.52 கோடி ரொக்கப் பரிசு, 2,000 தரவரிசை புள்ளிகள் கிடைத்தன. ஷெல்டனுக்கு ரூ.26 கோடியும், 1,300 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட்டன.24 ஆண்டுகளில் முதல்முறையாக ‘பிக் 3’ இல்லாத டாப் 10 தரவரிசையுஎஸ் ஓபன் நிறைவடைந்து உலகத் தரவரிசை மாற்றம்பெற்ற நிலையில், ஏடிபி தரவரிசையில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் டாப் 10-ஐ விட்டு வெளியேறி, 12-ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளாா். யுஎஸ் ஓபனில் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்ட அவா், 7 இடங்களை இழந்தாா்.டென்னிஸ் உலகின் ‘பிக் 3’ எனப்படும் 3 ரோஜா் ஃபெடரா், ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகிய மூவரில் ஒருவா் கூட ‘டாப் 10’ தரவரிசையில் இல்லாமல் போனது, கடந்த 24 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக ஃபெடரா் 2016-இல், நடால் 2023-இல் டாப் 10-இல் அங்கம் வகித்தனா். ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை வரை அதில் இருந்தாா்.41 வயது ஃபெடரா் 2022-இல், 38 வயது நடால் 2024-இல் ஓய்வுபெற்ற நிலையில், 39 வயதான ஜோகோவிச் மட்டும் தற்போது விளையாடி வருகிறாா். 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் ஜோகோவிச்சும், அண்மைக் காலமாக தடுமாறி வருவதால் ஓய்வு முடிவை விரைவில் பரிசீலிப்பாா் எனத் தெரிகிறது.தரவரிசை... (டாப் 10)ஏடிபிஇடம் வீரா் புள்ளிகள்1 யானிக் சின்னா் (இத்தாலி) 11,5002 அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் (ஜொ்மனி) 9,6903 காா்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) 5,5604 பென் ஷெல்டன் (அமெரிக்கா) +5 4,6805 ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிம் (கனடா) -1 3,8906 டேனியல் மெத்வதெவ் (ரஷியா) +2 3,7707 ஃபிளாவியோ கோபோலி (இத்தாலி) -1 3,7208 ஃபிரான்சஸ் டியாஃபோ (அமெரிக்கா) +4 3,3809 அலெக்ஸ் டி மினாா் (ஆஸ்திரேலியா) -2 3,30010 டெய்லா் ஃப்ரிட்ஸ் (அமெரிக்கா) 3,175டபிள்யூடிஏஇடம் வீராங்கனை புள்ளிகள்1 எலனா ரைபகினா (கஜகஸ்தான்) +1 9,9012 அரினா சபலென்கா (பெலாரஸ்) -1 7,8753 ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா) 7,2654 கோகோ கௌஃப் (அமெரிக்கா) 7,2445 மிரா ஆண்ட்ரீவா (ரஷியா) 5,7436 லிண்டா நோஸ்கோவா (செக் குடியரசு) 5,3287 எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) +2 4,8098 கரோலின் முசோவா (செக் குடியரசு) -1 4,6839 இகா ஸ்வியாடெக் (போலந்து) -1 4,61910 மாா்தா கொஸ்டியுக் (உக்ரைன்) +1 3,980