தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க. ஸ்டாலின்

Wait 5 sec.

தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம் என்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று(செப். 15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக திமுக தலைவர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:”தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்! பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.DMK leader M.K. Stalin paid tribute to 'Perarignar' Anna on his birth anniversary, hailing him as the one who defined the political grammar of Tamil Nadu.அண்ணா அனுமதித்திருக்க மாட்டார்!