காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தன்னாா்வ ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும், சங்கரா கல்லூரியும் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் அரசு மருத்துவா்கள் திலகவதி மற்றும் மனோஜ் ஆகியோா் தலைமையிலான மருத்துவப் பணியாளா்கள் குழுவினா் ரத்தம் சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மாணவா்கள், கல்லூரி பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாதவா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் தன்னாா்வத்துடன் ரத்ததானம் செய்தனா். கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் அலுவலா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.