தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Wait 5 sec.

இலங்கையில் தஞ்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை அபராதத்துடன் அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த ஆக. 6ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் விசைப்படகையும் இலங்கை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் மீனவர்கள் 11 பேரையும் இலங்கை அரசு இன்று விடுதலை செய்துள்ளது. மீனவர்கள் 11 பேரின் வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இலங்கை மதிப்பில் தலா ரூ. 50,000 அபராதத்துடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. An order has been issued by a Sri Lankan court releasing 11 Rameswaram fishermen who had taken refuge in Sri Lanka, imposing a fine.சென்னையில் உலகளாவிய திறன் மையம்! முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!