கொளத்தூரில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்41 அடி உயர சங்கு விநாயகர்!

Wait 5 sec.

சென்னை: கொளத்தூரில் 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்ட மகாலட்சுமி சங்கு விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகே, கொளத்தூர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்டுதோறும் விதவிதமான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கும் பக்தர்களின் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் 12,000 மகாலட்சுமி சங்கு மற்றும் 4,000 சிற்பி உருவங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.பத்து நாள்களுக்கும் மேலாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை, 41 அடி உயரமும் 32 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, மகாலட்சுமி சங்கு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் காட்சியளிக்கிறது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து, பிரம்மாண்ட விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.ஆண்டுதோறும் புதுமையான வடிவமைப்பில் விநாயகரை உருவாக்கி, கொளத்தூர் பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் கொளத்தூர் நண்பர்கள் குழுவினரின் முயற்சிக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.In Kolathur, the 41-foot-tall and 32-foot-wide Mahalakshmi Sanghu Vinayagar statue is greatly captivating devotees.பக்தர்களை கவரும் கோவா கடற்கரையில் இளநீர் குடிக்கும் விநாயகர் சிலை! வாக்களிக்கும் விநாயகர்! தேர்தலை நடத்தும் விநாயகர்கள்!25 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!