பிருத்விராஜ் - ராகுல் சதாசிவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Wait 5 sec.

நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பூதகாலம், பிரம்மயுகம், டீயஸ் ஐரே படங்களை இயக்கி ரசிகர்களிடம் நல்ல ஹாரர் இயக்குநர் எனப் பெயரெடுத்த ராகுல் சதாசிவன் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒடியன் ஏஜ் ஆஃப் இல்லுஷன் (odiyan - age of illusion) எனப் பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுவும் ஹாரர் பாணியில் உருவாக உள்ளதால் ராகுல் சதாசிவன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படத்தின் டிரைலர்!Filming for the new movie starring actor Prithviraj has begun.