செய்யறிவு வளர்ந்து வரும் சூழலில், நேரடி இசை நிகழ்ச்சிகள் ஒரு மாற்றத்தின் பகுதியாக இருக்கும் என்று பாடகி சரஸ் மேனன் தெரிவித்துள்ளார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.இந்த கருத்தரங்கில் இசைக் கலைஞர்கள் சரஸ் மேனன், ஸ்ரவன் ஸ்ரீதர் மற்றும் ஃபால்ட் காய் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.சரஸ் மேனன் பேசுகையில், “சுற்றுலா என்பது ஒரு அனுபவமாகவும், நிம்மதியையும் கொடுக்க வேண்டும். சுற்றுலா செல்லும் இடம் அழகாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இந்தியாவில் சுற்றுலா முடித்து செல்பவர்கள் மனதில் போக்குவரத்து நெரிசல் சப்தங்களும், சுற்றி நிலவும் கூச்சலும்தான் நிறைகிறது.இசையில் முதலீடு செய்யவும், அதில் பணத்தைச் செலவிடுவதையும் இந்தியா நம்புவதில்லை. தற்போது செய்யறிவு வளர்ந்து வரும் சூழலில், நேரடி இசை நிகழ்ச்சிகள் அதற்கான மாற்றத்தின் பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.ஃபால்ட் காய் பேசுகையில், “சுயாதீனக் கலைஞர்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். தற்போது ரேப் மற்றும் கானா பாடல்கள் இல்லாத படங்களே இல்லை. நான் ஒரு சுயாதீனக் கலைஞராக, சுயாதீனமான கலைப் படைப்புகளை உருவாக்குவதையே எப்போதும் விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.Live music performances are an alternative to AI! – Singer Saras Menonமூன்றில் ஒரு வேலைவாய்ப்பு சுற்றுலாத் துறையில் உருவாகிறது! சுமன் பில்லா