இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. விஜய் சேதுபதியே இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவின்யா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார் ஆகிய 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.இதனிடையே, நடிகர் பிளாக் பாண்டிக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களால் சவின்யா தேர்ந்தெடுக்கப்பட்டு, நிகழ்ச்சியில் இருந்து அனுப்பப்பட்டார்.கடந்த வெள்ளிக் கிழமை, வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜாவித் வெளியேறினார்.இந்த வார நாமினேஷுனுக்கு அஸ்மிதா, அவினாஷ், சாந்தினி, ஜேசன், குமரன், லஷ்மி பிரியா, மணிவண்ணன், பிருத்வி, வினோத் பாபு ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர்இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மக்கள் வாக்களித்தனர், இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற மணிவண்ணன், பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.Information regarding which contestant was evicted from the Bigg Boss show this week has been revealed.சர்ச்சையான தனது பிக் பாஸ் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி!