கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாயைவிட செலவு அதிகமா?

Wait 5 sec.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் தமிழக அரசின் வருவாயைவிட ரூ. 20,349 கோடி செலவு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.தமிழக அரசுக்கு மாநில ஜிஎஸ்டி, முத்திரைத் தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணம், மாநில ஆயத்தீர்வை உள்ளிட்டவை மூலம் வரி வருவாயும், சேவைக் கட்டணங்கள், அபராதம் உள்ளிட்டவை மூலம் வரியல்லாத வருவாயும் கிடைக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், இலவசத் திட்டங்கள், அரசின் மானியங்கள் உள்ளிட்டவை மூலம் அரசுக்கு செலவும் ஏற்படுகிறது.இதன்படி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கடந்த 5 மாதங்களில் வரி மற்றும் வரியல்லாத வருவாயாக மாநில அரசுக்கு ரூ. 1,17,791 கோடி கிடைத்துள்ளது. மாநில ஜிஎஸ்டி வருவாயாக ரூ. 34,144.06 கோடியும், முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் ரூ. 10,493.30 கோடியும், வர்த்தகம் மீதான வரி மூலம் ரூ. 28,164.79 கோடியும், மாநில ஆயத்தீர்வை மூலம் ரூ. 5,214 கோடியும், மத்திய அரசின் வரி பங்கின் வாயிலாக ரூ. 24,188 கோடியும், நிலம் விற்பனையில் ரூ. 57.16 கோடியும், இதர வரி மற்றும் தீர்வைகள் வாயிலாக ரூ. 6,843 கோடியும், வரியல்லாத வருவாய் மூலம் ரூ. 5,149 கோடியும், மத்திய அரசின் மானியங்கள் மூலம் ரூ. 3,537 கோடியும் கிடைத்துள்ளது.இதே காலகட்டத்தில் அரசுக்கு ரூ. 1,38,140 கோடி செலவும் ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்காக ரூ. 25,991 கோடியும், ஓய்வூதியத்தின் பங்காக ரூ. 21,008 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 5 மாதங்களில் தமிழக அரசு ரூ. 30,021 கோடி கடன் வாங்கியுள்ளது.கடந்த 5 மாதங்களில் வருவாயைவிட செலவு கூடுதலாகி, ரூ. 20,349 கோடி வருவாய்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!TamilNadu government's revenue and expenditure in the last 5 months