மேட்டூா் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் இரண்டவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது.இதன்மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.முதல் பிரிவில் 2 வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் பொறியாளர்களும் பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் பழுது நீக்கப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.Power generation of 210 MW was affected at the Mettur Thermal Power Station due to a burst in a boiler tube in Unit 2 of the first section.தொடா் மழை: சோத்துப்பாறை அணை நீா்மட்டம் 2 நாள்களில் 6 அடி உயா்வு