ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:”கடந்த 2024 ஆம் ஆண்டு ஃபென்ஜால் (Fengal) புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது.உள்மாவட்டங்களில் இன்று(செப். 20) நல்ல மழைப்பொழிவு காத்திருக்கிறது. திருச்சி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்பட உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.தென் தமிழகத்தைப் பொருத்தவரை வழக்கம்போல மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யும். பெங்களூரில் இன்று கனமழை பெய்யும்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடந்த 2 நாள்களாக மழை மேகங்கள் மிக அருகில் வந்தும், துரதிர்ஷ்டவசமாக அவற்றைத் தவறவிட்டு வருகிறது. இதற்கிடையில் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இந்த மழைப் பொழிவில் இணையும் என்று நம்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.Private weather blogger Pradeep John has reported that extremely heavy rainfall has been recorded in Krishnagiri district following Cyclone Fengal.திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை