தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தில் சில்லரை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு புதிய சீருடைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் நவ. 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின்போது டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சீருடைகள் மற்றும் துணி மற்றும் தையல் செலவுகளுக்காக ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை அணிதல் திட்டம் நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.3 சீருடைகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் ரூ. 6,000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மேற்பார்வையாளர்கள் நீல நிற சட்டையும் அடர் நீல நிற பேண்ட் அணிவார்கள்.விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் வெளிர் பழுப்பு நிற சட்டையும், அடர் சாம்பல் நிறக் பேண்ட் அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சீருடையின் இடது பக்க நெஞ்சில் TASMAC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இலச்சினை இடம்பெறும் வகையில் சீருடை அமைக்கப்பட்டுள்ளது.A new uniform scheme has been introduced for supervisors, salespeople, and assistant salespeople working at TASMAC retail outlets in Tamil Nadu.கோரிக்கையை நிறைவேற்றினால் ரூ. 10 வாங்க மாட்டோம்: டாஸ்மாக் ஊழியர்கள்