3 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் ஹபீபி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Wait 5 sec.

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ஹபீபி திரைப்படம் 3 மாதங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகிறது.அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களின் இயக்குநர் மீரா கதிரவன் ஹபீபி என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடையநல்லூரிலுள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவான இதில் நாயகனாக ஈசாவும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.சாம் சிஎஸ் இசையமைக்க மகேஷ் சுவாமி கேமரா இயக்கியுள்ளார். கதை வி எஸ் முகமது அமீன் எழுதியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் நேசம் என்டர்டெயின்மென்ட் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். கடையநல்லூர் பகுதியைச் சுற்றி 4 காலகட்டங்களில் நடக்கும் கதைகளில், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் சாலைகள், வீடுகள், கடைகள் என சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நெசவுத் தொழிலை இஸ்லாமிய மக்கள் மேற்கொள்வது புதிய செய்தியாக இருந்தாலும் அதில் அந்த மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிக்கொண்டு வருவது, பொருளாதார மாற்றம் எப்படி குடும்பத்தை மாற்றுகிறது என்பதே படத்தின் மையக்கரு.இந்த நிலையில், ஹபீபி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான மூன்று மாதங்களுக்குப் பிறகு, சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் செப். 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.The film habeebi, directed by Meera Kathiravan, is set to release on an OTT platform after three months.ஹபீபி - வென்று காட்டினாரா மீரா கதிரவன்?