தவெக ஆட்சியில் விண்ணைமுட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Wait 5 sec.

தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.சேலத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், அண்ணா என்று சொன்னாலே அதிமுகவைத்தான் குறிக்கும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று அண்ணா குறிப்பிட்டார். அப்படி ஏழைகளைக் காத்த அரசுதான் அதிமுக அரசு; ஏழைகளுக்காக உழைத்த அரசுதான் அதிமுக.இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக வருவதற்கு வித்திட்டது அதிமுக ஆட்சிதான். இன்றைக்கு இருக்கும் ஆட்சியாளர்கள் விபத்தினால் வந்தவர்கள். ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்ன பேசுவதென்று தெரியாமல் பேசுகிறார்கள். இந்த ஆட்சியில் ஒரு ரூபாய் செலவு செய்து ஒரு லட்சத்திற்கு விளம்பரம் செய்கிறார்கள்.இந்தக் கட்சியின் மூலதனமே ரீல்ஸ், ரீல். இதுதான் தவெகவின் மூலதனம். இதை வைத்தே ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். கரோனா காலகட்டத்தில்கூட விலைவாசி ஏறவில்லை. ஆனால் இன்றைக்கு விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு ஏறிவிட்டது. இப்படி அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் 40 சதவீதம் உயர்ந்துவிட்டது.இதைக் குறைப்பதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 40 சதவீதம் விலை உயர்வு என்றால் ஆட்சியாளர்களின் லட்சணம் எப்படி உள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆட்சியாளர்களுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை என்று தெரிவித்தார்.இரண்டே இரண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே! - முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சுAIADMK General Secretary Edappadi Palaniswami has accused the TVK government of causing prices to skyrocket.