இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது.124 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!முதலில் விளையாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் 35 ரன்கள் எடுத்தார். கேப்டன் சரித் அசலங்கா 16 ரன்கள், தாசுன் ஷானகா 12 ரன்கள் மற்றும் லகிரு உதாரா 10 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜாக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லியம் டாஸன் மற்றும் ஜேமி ஓவர்டான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.Batting first in the third T20 match against England, the Sri Lankan team was bowled out for 124 runs.ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!