மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்புடன் நடைபெறுவது மகிழ்ச்சி: முதல்வர் விஜய்

Wait 5 sec.

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சிறப்புடன் நடைபெறுவது மகிழ்ச்சி என முதல்வர் விஜய் புதன்கிழமை (செப். 16) தெரிவித்துள்ளார்.17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நாளை (செப். 17) விமர்சையாக நடைபெற உள்ளது.இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்! நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி…— CMOTamilNadu (@CMOTamilnadu) September 16, 2026பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம்: சீமான்Chief Minister Vijay expressed happiness on Wednesday (Sept. 16) that the consecration ceremony of the Meenakshi Amman Temple is being conducted successfully.