இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தான் ரஜினி உடனான ‘தலைவர் 173’ திரைப்பட வாய்ப்பை இழந்தபோது தனக்கு அட்லீ உத்வேகம் அளித்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து டான் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. இந்தப் படத்தின் கமர்ஷியல் (ரூ. 100 கோடிக்கும் அதிக வசூல்) வெற்றியினால் தமிழ் சினிமாவில் உடனடியாக கவனம் பெற்றார்.நடிகர் ரஜினி காந்த் ஜெயிலர் படத்துக்குப் பிறகு யாருடன் இணைவது என்ற தேடல் இருந்து வந்தது. சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் சுந்தர் சி.யும் இதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சுந்தர் சி. வெளியேற்றத்துக்குப் பிறகு இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இறுதிசெய்ததாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின. பின்னர், சிபி சக்ரவர்த்தியும் கதை பிரச்னையினால் நீக்கப்பட்டு அதிர்ச்சி அளிக்கப்பட்டது. தற்போது, அந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இதற்கு தர்மன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிபி சக்கரவர்த்தி பேசியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் ரஜினி சாருடன் படத்தை இயக்கவிருந்தேன். பின்னர் அந்த வாய்ப்பை இழந்தேன். அது மிகவும் வலிமிகுந்த காலகட்டமாக இருந்தது. அந்த சமயத்தில் அட்லீ என்னிடம் பேசினார். ‘நீ ஒரு பிளாக்பஸ்டர் இயக்குநர். நீ இதற்கெல்லாம் சலிப்படையக்கூடாது’ எனப் பேசியது எனக்கு உத்வேகத்தை அளித்தது. நீங்கள் பெருமைப்படும் அளவுக்கு விரைவில் நல்ல படத்தை எடுப்பேன் எனக் கூறியுள்ளார். இயக்குநர் அட்லீயுடன் தெறி, மெர்சல் படங்களில் சிபி சக்ரவர்த்தி உதவி இயக்குநராக வேலைப் பார்த்ததும் கவனிக்கத்தக்கது. அதனால், அட்லீயின் தயாரிப்பில் உருவாகியுள்ள பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.அதீத வன்முறை... பான் இந்திய மொழிகளில் வெளியான ரஷ்மிகா மந்தனாவின் மைசா பட டீசர்! Cibi Chakaravarthi says Atlee inspired him to bounce back after missing out on Thalaivar 173