பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!

Wait 5 sec.

பண்டிகை காலத்தையொட்டி நாட்டில் இந்த ஆண்டு 15 - 20% பேருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கவுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, 2 முதல் 2.5 லட்சம் பேருக்கு பருவகால அல்லது பகுதி நேர வேலைவாய்ப்புகள் ஏற்படவுள்ளன.அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்.எல்.பி எனப்படும் நெக்ஸ்ட் லெவல் பிஸ்னஸ் சர்வீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நிறுவனங்கள் கடைசி நேர அவசரநிலையை தவிர்க்கும் வகையில் பண்டிகை காலத்தையொட்டி முன்கூட்டியே விற்பனையை கணித்து அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியான பணியாளர்களை நியமிப்பதில் நிறுவனங்களுக்கு உள்ள கடைசிநேர அழுத்தநிலையை குறைக்கும் வகையில், அந்நிறுவனங்களின் உயரதிகாரிகள், 12 முதல் 14 வாரங்களுக்கு முன்பு வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனர். பண்டிகைகாலத்தையொட்டிய தேவைகள் குறுகிய காலத்திற்குள் அதிகரிப்பதால், தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் பணியாளர்களின் தயார்நிலை முக்கியமான காரணியாக உள்ளது. வணிகத்திற்கு உகந்த காலகட்டம் என்பதால், பண்டிகைக்கு முன்பு பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு போதிய பயிற்சியும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பண்டிகை காலத்தில் பொருள்களை வாங்குவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும், பண்டிகை கால விற்பனை அதிகரிப்பையும் தவறவிடக் கூடாத் என்ற நோக்கமும் இதில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பண்டிகைகால வேலைகள் பெரும்பாலும், வீடுகளுக்கு பொருள்களை கொண்டு சேர்ப்பது, கிடங்கு பராமரிப்பு, சில்லறை விற்பனை, வாடிக்கையாளர் சேவை, கள ஆய்வு, வாடிக்கையாளர் தேவை அறிவது போன்றவை முக்கிய வேலைகளாகப் பார்க்கப்படுகின்றன. இதுபோன்ற செயல்பாட்டுப் பணிகளின் வளர்ச்சி விகிதம் இக்காலகட்டத்தில் 15 - 20% அதிகரிப்பதாக என்.எல்.பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக இதில் 40 - 50% வேலைவாய்ப்புகள், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களைச் சென்று சேர்வதற்காக ஏற்படுத்தப்படுகின்றன. அதாவது ஜெய்ப்பூர், லக்னெள, இந்தூர், சூரத், நாக்பூர், புவனேஸ்வர், கோவை, சண்டிகர், கொச்சி போன்ற இன்னபிற இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக இத்தகைய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும், ஒழுங்கமைக்கப்பட்ட கிளை நிறுவனங்களிலும், இணைய விற்பனை தள நிறுவனங்களில் இப்பணியமர்வு நடக்கின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டி: காலிறுதிக்கு முன்னேறிய பாட்மின்டன் பெண்கள் அணி!Festive hiring set to rise 15–20 pc, could generate 2–2.5 lakh seasonal jobs in 2026