பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயம்: 2-ம் இடம்பிடித்து அசத்திய அஜித் குமார் அணி!

Wait 5 sec.

பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 2-வது இடம்பிடித்து அசத்தியுள்ளது.நடிகரும் ரேஸருமான அஜித் குமார் உலகளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அஜித் குமார் ரேஸிங் அணி மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த ரெட்ஆண்ட் ரேஸிங் அணிகளின் கூட்டணியில், அஜித்தின் குழு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில், பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேரம் கார் பந்தயத்தில் அஜித்தின் குழுவினர் பங்கேற்றனர். 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் இந்த பந்தயத்தில் அதிக தூரம் காரை இயக்குபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயத்தில், அஜித் குமாரின் ரேஸிங் அணி GT3 Pro-Am பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. அதேபோல, பந்தயத்தின் ஒட்டுமொத்த தரவரிசையில் 5-வது இடம்பெற்றுள்ளது.மேலும், கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, அஜித் தேசியக் கொடியை ஏந்தி GT3 Pro-Am பிரிவில் 2-ம் இடம்பிடித்ததன் வெற்றியைக் கொண்டாடினார்.அஜித் குமார் ரேஸிங் அணி கார் பந்தயங்களில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் துபாய் ஆட்டோட்ரோம், இத்தாலியின் முஜெல்லோ சர்க்யூட், பெல்ஜியத்தின் சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ் மற்றும் ஸ்பெயினின் சர்க்யூட் டி பார்சிலோனா - கேடலூனியா உள்ளிட்ட 24 மணி நேர கார் பந்தயத் தொடர்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. சில நாள்களுக்கு முன், லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த பந்தயத்தில் அஜித் 38-வது இடத்தை பிடித்த நிலையில், சமூக ஊடகங்களில் பலரும் அதனை விமர்சித்தனர். அதற்கு பதிலடி தரும் விதமாக, இந்த கார் பந்தயத்தில் 2-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். அனைவருக்கும் நன்றி: சூர்யா - ஜோதிகா திருமண நாள் கொண்டாட்டம்!The Ajith Kumar Racing team put up an impressive performance, securing second place in the 24-hour car race held in Barcelona.