வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கை

Wait 5 sec.

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுவாசக் கோளாறு காரணமாக செப்டம்பர் 9 அன்று சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபுவின் உடல்நிலை, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது மருத்துவ அளவீடுகள் தற்போது சீராக உள்ளன. அவரது முழு உடல்நிலையும் சீராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Kolathur MLA V.S. Babu condition is stable: Hospital report தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு? இன்றைய நிலவரம் (செப். 15)