இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

Wait 5 sec.

திமுக முப்பெரும் விழா இன்று(செப். 15) நடைபெறவிருந்த நிலையில், விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாா் ஈ.வெ.ரா., முன்னாள் முதல்வர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள்கள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து மும்பெரும் விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான திமுக முப்பெரும் விழா வருகிற செப்.15-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த விழாயொட்டி, திராவிட இயக்க வளர்ச்சிக்காகப் பங்காற்றிய மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுக்கான தேர்வாளா்கள் பட்டியலை திமுக தலைமை அண்மையில் வெளியிட்டு இருந்தது.இந்த நிலையில், அண்ணா அறிவாலத்தில் இன்று மாலை நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திமுக பொதுச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.DMK General Secretary Duraimurugan has announced that the party's 'Mupperum Vizha' (Grand Tripartite Festival), which was scheduled to be held today (September 15), has been postponed.தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க. ஸ்டாலின்