திமுகவினர் பேச்சு அவர்களுக்கு பலவீனத்தை தரும் என திருமாவளவன் கூறிய அறிவுரையை ஏற்பதாகவும், அதே நேரத்தில் மதுராந்தகம் வெற்றி செய்தியை விரைவில் அவர் அறிவார் என மதுராந்தக திமுக வேட்பாளர் பரந்தாமன் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.தமிழகத்தின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் சட்டத்துறை இணை செயலாளர் ஐ. பரந்தாமன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலை முன்பு தனது வேட்புமனு விண்ணப்பத்தை வைத்து, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர், எம்பி செல்வம், திமுக கொள்கை பரப்பு செயலாளர் முன்னாள் எம்எல்ஏ எழிலரசன் மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களுடன் பேசுகையில், பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் இன்று அவருக்கு மலர் மாலை அணிவித்து தனது வேட்பு மனுவை அவரிடம் வைத்து வாழ்த்துக்கள் பெற்று வேட்பு மனு தாக்கல் செய்வது பெரும் பாக்கியம் என தெரிவித்தார். மேலும் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும், மதுராந்தகம் மக்கள் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார்கள் என தெரிவித்தார். தவெக கூட்டணி வெற்றி பெறும் என திருமாவளவன் கூறியது குறித்து கேட்டபோது, கூட்டணியின் பெயர் மட்டும்தான் வெற்றி உள்ளது, அது வரும் தேர்தல் இறுதியில் திருமாவளவன் தெரிந்து கொள்வார். திமுகவில் யார் தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் தலைவர் எங்களது தலைவர் எனவும், திருமாவளவனின் அறிவுரையை தாங்கள் ஏற்பதாகவும் தெரிவித்தார். கடந்த இடைத்தேர்தல் வரலாறுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது, எம்ஜிஆர் காலத்திலேயே நடந்தது எனவும் தெரிவித்தார். Maduranthakam people will not make same mistake again: DMK candidate Paranthamanவி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கை