வேலையிழந்த ஆரக்கிள் நிறுவன ஊழியர் மனைவியின் லிங்க்ட்இன் பதிவு வைரல்

Wait 5 sec.

ஆரக்கிள் நிறுவனத்தில் 12 ஆண்டுகாலம் பணியாற்றி, வெளியேற்றப்பட்ட ஒரு ஊழியரின் மனைவி, தன்னுடைய கணவரின் பணி குறித்து வெளியிட்ட லிங்க்ட் இன் பதிவு வைரலாகியிருக்கிறது.இன்று என்னுடைய கணவர் சௌரவ் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று பூஜா சாஹு பதிவிட்டுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றியிருந்தார். ஆனால், ஒரே ஒரு மேலதிகாரிகூட, அவரிடம் பணியிலிருந்து நீக்கப்படுவது குறித்து பேசவில்லை. அவருடைய வேலைக்கான தளத்தில் அவரால் உள் நுழைய முடியவில்லை அதன்பிறகே அவருக்கு என்ன நடந்திருக்கிறது என்று புரிந்தது.தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும், மருத்துவமனையில் என்னை கவனித்தபடியே அவர் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு சுற்றுலா சென்றாலும், அவர் பணியாற்றிக்கொண்டேதானிருப்பார்.ஹோலி, தீபாவளி, ராக்கி, அவரது பிறந்தநாள், திருமணநாள் என எதுவும் கிடையாது. வார இறுதிநாள்கள் கிடையாது. அவர் வேலை செய்து கொண்டிருப்பார்.உடல்நலம் பாதித்தாலும் இரவு 3 மணி வரை வேலை செய்தார். எப்போதும் சிரித்த முகத்துடன், தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு உதவி செய்ய முன்வருவார். ஒருநாளும் பணி அழுத்தம் குறித்து அவர் பேசியதேயில்லை. அவரது நண்பர்கள்தான் அவரது பணியழுத்தம் குறித்து கூறியிருக்கிறார்கள். இருபது ஆண்டுகளாக மென்பொருள் துறையில் பணியாற்றி வந்தார். பல்வேறு பணியழுத்தங்களுக்கு இடையே குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல், ஒரு நிலையற்ற அச்ச உணர்வுடனே பலரும் இவ்வாறு பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். நிறைவாக, மிக நல்ல திருப்பங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன என்றும் அவர் தன்னுடைய கணவருக்காக்ப் பதிவிட்டிருக்கிறார்.இந்த பதிவு தற்போது வைரலாகியிருக்கிறது. பலரும் இதே சூழ்நிலையில் இருக்கும்போது தங்களுடைய அனுபவங்களையும் அதில் பகிர்ந்து வருகிறார்கள்.