அண்ணா பிறந்த நாள்: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை!

Wait 5 sec.

அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். தமிழக முன்னாள் முதல்வர், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் அவரை நினைவு கூர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டும் வருகின்றனர். அந்த வகையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் இன்று அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே. பிரபு, சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆர். குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். TVK ministers paid tribute to anna on his birth anniversary தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!