இந்தியாவில் நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான போட்டிகள் நடைபெறும் தேதிகளை அதிகாரபூர்வமாக பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆடவருக்காக நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போலவே மகளிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) போட்டிகளை பிசிசிஐ நடத்துக்கின்றன. முதல் சீசன் 2023ல் நடைபெற்றது.நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் 2027ஆம் ஆண்டில் ஜனவரி 14 முதல் பிப்,7ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதற்கான ஏலம் வரும் அக்.28ஆம் தேதி கொச்சியில் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகளிர் கிரிக்கெட்டில் உலகின் மிகப்பெரிய டி20 லீக்கான டாடா டபிள்யூபிஎல் விளையாட்டின் முன்னேற்றத்துக்காக தன்னை முன்னிறுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளுடன் உலகின் அனைத்து வீராங்கனைகளும் உயர்தர கிரிக்கெட்டில் பங்கேற்று தங்கள் திறமைகளை வளர்க்க வாய்ப்பினை உருவாக்குகிறது. வீராங்கனைகளை தக்கவைப்பதற்கான கடைசி தேதி செப்.28ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த சீசனுக்கான யார் யார் எந்தெந்த இடத்தில் தேவையோ அவர்களை எல்லாம் ஐந்து அணிகளும் தக்கவைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. News #TATAWPL 2027 to be played from 14 January to 7 February 2027 ️Player Auction to be held on 28 October 2026 in Kochi More details ▶️ https://t.co/tuEXkaaY6T pic.twitter.com/mjLcSOJawp— Women's Premier League (WPL) (@wplt20) September 16, 20263 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் ஏலம்! Women's Premier League WPL 2027 to staged from January 14 to February 7