தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற கேடுகெட்ட சட்டப்பேரவையை பார்த்ததில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.சென்னை வேலப்பஞ்சாவடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "கடந்த 4 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு பிரச்னை மோசமானதாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யிடம் நான் கேள்வி எழுப்பினேன். கிட்டத்தட்ட 38 நிமிடங்களில் 16 கேள்விகள் எழுப்பினேன். என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் முதல்வர் சென்றுவிட்டார்.3 நாள்கள் கழித்து சட்டப்பேரவைக்கு அவர் வந்தபின்னரும்கூட, ஒரு கேள்விக்குக்கூட அவர் பதிலளிக்கவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பிரச்னையைக் கொண்டுவந்து, சர்க்காரியா கமிஷன், மிசா கைது குறித்து பேசுகிறார்.அவருடைய மேசையில் இருக்கும் 3 கோப்புகளைத் திறக்க வைத்துவிட வேண்டாம் எனக் கூறிவந்தார். முதல்வர் என்றால், மேசையில் இருக்கும் கோப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும் என்றும், ஜோதிடர் சொன்னால்தான் பார்ப்பீர்களா என்றும் நான் கேட்டேன். யார் மீதும் தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினேன்.இதுவரையில் அதுகுறித்து அவரிடம் பதிலேதும் இல்லை. இதுபோன்ற கேடுகெட்ட சட்டப்பேரவையை தமிழக வரலாற்றிலேயே இதுவரையில் யாரும் பார்த்ததில்லை.அவர்கள் ஆட்சிக்கு வந்ததை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. எந்த கேள்வி கேட்டாலும் திமுக மீது பழிபோடுகின்றனர். இப்பேற்பட்ட கோமாளித்தனத்தைத்தான் மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தேவை 118 இடங்கள். ஆனால், அவர்கள் (தவெக) பெற்றது 106 இடங்கள் மட்டுமே. அதே சமயம், திமுக தலைமையில் திமுகவின் சாதனைகளைக் கூறி, வாக்கு சேகரித்து, எம்எல்ஏ-வாக வெற்றி பெற்ற நம் கூட்டணிக் கட்சியினருடன்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த ரீல்ஸ் கும்பலுக்கு வாக்களித்த மக்களும், ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்ற கவலையில் உள்ளனர். இந்த ஆட்சியாளர்களின் கூத்து மற்றும் அட்டூழியங்களை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் பிற கட்சித் தலைவர்கள்: அதிமுக, பாஜக எதிர்ப்புTamilnadu People regret voting for TVK, says LoP Udhayanidhi Stalin