விஜய்க்கு எதிராக நடிகர் அஜித் கட்சி தொடங்குகிறாரா? தமிழக மக்கள் கழகம் அறிமுகம்

Wait 5 sec.

நடிகரும் ரேஸருமான அஜித்குமாரின் ரசிகர்கள் ஒன்றிணைந்து தமிழக மக்கள் கழகம் என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர்.நடிகரும் ரேஸருமான அஜித்குமார், திரைப்படங்களில் நடித்துக் கொண்டும், இடையில் கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். இவருக்கு ரசிகர் மன்றங்கள் எதுவும் வைக்க வேண்டாம் என தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தியபோதிலும், அஜித்குமாருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.முதல்வர் விஜய் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவரது ரசிகர்களும், அஜித்குமாரின் ரசிகர்களும் எப்போதும் மோதலிலேயே இருப்பர். இப்போதும்கூட இருவரின் ரசிகர்களும் சில இடங்களில் பேனர் வைத்து போட்டி போடுவதும் உண்டு. இருப்பினும், விஜய்யும் அஜித்குமாரும் முன்பிருந்தே நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.சமீபத்தில் அஜித்குமாரின் அணி பங்கேற்ற கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடக்கி வைத்து, இருவரும் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, விஜய் தற்போது முதல்வரான நிலையில், அஜித்குமாரின் ரசிகர்களும் சேர்ந்து புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டை பகுதியில் அஜித்குமாரின் ரசிகர்களும் தீவிர ஆதரவாளர்களும் ஒன்றுசேர்ந்து, தமிழக மக்கள் கழகம் என்ற அரசியல் கட்சியை முறைப்படி தொடங்கியுள்ளனர். மேலும், தங்கள் கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மூன்று வர்ணங்களாலான அக்கொடியில் மஞ்சள், வெள்ளை, சிகப்பு நிறங்களும், நடுவில் இரு சிறுத்தைகளின் உருவமும் இடம்பெற்றுள்ளன.இதனைத் தொடர்ந்து, புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு, அடுத்தகட்ட களப்பணிகள், கொள்கை பிரகடனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.அதுமட்டுமின்றி, கட்சியின் பொதுச் செயலாளராக அஜித்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதிமுகவில் இன்னும் 20 பேர் தயாராக உள்ளனர்: செங்கோட்டையன்Fans of actor Ajith Kumar launch a new political party