குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவை வருகிறார்.நீலகிரி மாவட்டம் குன்னூரில் திங்கள்கிழமை (செப். 21) நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவிருக்கிறார்.இதனையொட்டி, தில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, நாளை பிற்பகல் 12.35 மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவரை ஆட்சியர் பவன்குமார் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கவுள்ளனர். மேலும், குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி, கோவையில் இன்று (செப். 20) மாலை 5 மணிமுதல் செப். 22 காலை 11 மணிவரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பின்னர், அங்கிருந்து குன்னூருக்கு சென்று, பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறும் குன்னூர் தென்னிந்திய தேயிலைத் தோட்ட அதிபர்கள் சங்க நூற்றாண்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி, கோவை மற்றும் குன்னூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி, குன்னூர் பகுதிகளிலும் ஆளில்லா வான்வழி ஊர்திகளோ ட்ரோன்களோ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களோ இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளோ பறக்கவிடப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: அமைச்சர்கள், ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனைVice President C.P. Radhakrishnan to visit Coimbatore tomorrow