மும்பையில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சொகுசு கார் விபத்து: 3 பேர் பலி

Wait 5 sec.

மும்பையில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், கடற்கரைச் சாலையில் இருந்து ஹாஜி அலி நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதிவேகத்தில் வந்த அந்த கார் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி, கீழே பாய்ந்து விழுந்தது.காரில் இருந்த நான்கு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களில் மூன்று பேர் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக தெரிவித்தனர். மேலும் காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.விபத்தில் பிஎம்டபிள்யூ காரும் கடுமையாகச் சேதமடைந்தது. அந்த கார் பாலத்தில் தொங்கிக்கொண்டிருந்த விளம்பரப் பலகையைக் கிழித்துக் கொண்டு கீழே விழுந்துள்ளது. விபத்து தொடர்பான விடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். Three people were killed, and another suffered critical injuries after a speeding BMW crashed on Mumbai's Coastal Road and fell off a bridge in the early hours of Sunday.மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கட்டணமில்லா தரிசனம் நீட்டிப்பு!