ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம், வாகை சூட வா தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சந்தியா ராகம்சந்தியா ராகம் தொடரில் சந்தியா ஜகர்லமுடி, அந்தாரா, விஜே தாரா, ராஜீர் பரமேஸ்வரன், சுர்ஜித் குமார் உள்ளிட்ட பலர் பிரதான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இதில் ஜானகி, சந்தியா என்னும் இரு சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளான தனலட்சுமி, மாயா என்னும் இரு சகோதரிகளின் குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 2023 அக்டோபர் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு சந்தியா ராகம் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.இந்த நிலையில், சந்தியா ராகம் தொடர் நாளை(செப். 20) முதல் மாலை 6 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வாகை சூட வா நடிகர் இர்ஃபான் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் வாகை சூட வா தொடரில், பவித்ரா, குயிலி, மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.பொறுப்பாகப் படித்து முன்னேற நினைக்கும் நாயகிக்கும், பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் நாயகனுக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது. வாகை சூட வா தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், நாளை(செப். 20) முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது.The broadcast timings for the Zee Tamil serials Sandhya Ragam and Vaagai Sooda Vaa have been changed.கார்த்திகை தீபம் தொடரின் ஒளிபரப்பில் மாற்றம்!