புதுதில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம் குறையக்கூடும் என்ற கருத்துகளின் அடிப்படையில், ஐடி சேவையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த அச்சம் தணிந்ததால், ஒட்டுமொத்த பங்குச் சந்தை மந்தமாக இருந்த போதிலும், எச்சிஎல் டெக், ஹெக்ஸாவேர் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனப் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை உயர்ந்தன.மும்பை பங்குச் சந்தையில், எச்சிஎல் டெக் பங்குகள் 3.98 சதவீதமும், ஹெக்ஸாவேர் பங்குகள் 3.97 சதவீதமும், இன்ஃபோசிஸ் 3.64 சதவீதமும், டெக் மஹிந்திரா 2.31 சதவீதமும், டிசிஎஸ் நிறுவனம் 2.18 சதவீதமும், விப்ரோ 1.40 சதவீதமும் உயர்ந்தன.மும்பை பங்குச் சந்தையில் ஐடி குறியீடு 1.87 சதவீதம் உயர்ந்து 28,342.39 புள்ளிகளை எட்டியது.கரடியின் ஆதிக்கத்திலும், தகவல் தொழில்நுட்ப பங்குகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தின.IT stocks surged on Tuesday.ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி: பாமாயில் இறக்குமதி சரிவு!