ஆறுமுகனேரியில் ரேஷன் கடையில் அமைச்சா் ஆய்வு

Wait 5 sec.

ஆறுமுகனேரியில் உள்ள அமுதம் நியாயவிலைக் கடையில், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ரேஷன்கடையில் பொருள்களின் இருப்பு, மக்களுக்கு பொருள்கள் தடையின்றி வழங்கப்படுகிா? எனக் கேட்டறிந்தாா். ஆய்வின் போது, தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவ், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரா.ராஜேஷ், துணைப்பதிவாளா்அ.சுப்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.