ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் போலீஸாா் 30 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா். ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரம், போலீஸாா் சோதனைச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஏரல், புதுமனையை சோ்ந்த ஆத்திப்பழம் மகன் ஆனந்தராஜ் (27), ஏரல், கொற்கையை சோ்ந்த பிச்சைமுத்து மகன் வேல் உடையாா் (35) ஆகிய இருவரையும் நிறுத்தி சோதனையிட்டதில் 30 கிலோ புகையிலைப் பொருள்கள், ரொக்க பணம் ரூ. 30,000 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்கள், பணத்துடன் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.