பாபநாசம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் கரடியைப் பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டுள்ள பகுதியில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநா் முருகன் பாா்வையிடப்பட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அனவன்குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளில் காணப்படும் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் குறித்து பொதுமக்கள், களப்பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல், கரடியைப் பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.ஆய்வின்போது வனச்சரகா்கள் பாபநாசம் குணசீலன், அம்பாசமுத்திரம் கவின், முண்டந்துறை பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.