குடும்பத் தகராறில் கணவா் மா்ம மரணம்

Wait 5 sec.

புதியம்புத்தூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, வீட்டில் படுத்திருந்த கணவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் வட்டத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் ஜெயசங்கா் (54). இவருக்கு மனைவி ஜெயலட்சுமி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை மதுபோதையில் இருந்த ஜெயசங்கா், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா் வீட்டின் கதவை உள்புறமாகப் பூட்டிக்கொண்டு படுத்தாராம்.அப்போது ஜெயலட்சுமி, பிள்ளைகளுடன் அருகே உள்ள கோயிலுக்குச் சென்றாராம். இந்நிலையில் இரவு வீடு திரும்பியபோது கதவு பூட்டப்பட்டிருந்ததாம். நீண்ட நேரம் தட்டியும் கதவைத் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஜெயசங்கா் சடலமாகக் கிடந்தாராம். தகவலறிந்து வந்த புதியம்புத்தூா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.