வயநாடு வன விலங்கு சரணாலயத்தில் யானைகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் மக்னா யானை உயிரிழந்தது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முத்தங்கா வன விலங்கு சரணாலயத்தில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. யானையின் உடலைக் கைப்பற்றி வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, யானையின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மக்னா உயிரிழந்துள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின் முழுமையான விவரம் தெரியவரும் என்றனா்.